மனைவி மாயம்; கணவர் புகார்
ஈரோடு:சிவகிரி, அஞ்சூர், நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 38; தொழிலாளி. இவரது மனைவி சூர்யா, 23; தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கொடுமுடியில் மளிகை கடையில் சூர்யா வேலை செய்து வந்தார். கடந்த, 5ம் தேதி வேலைக்கு சென்ற சூர்யா வீடு திரும்பவில்லை. ராஜ்குமார் புகாரின்படி சிவகிரி போலீசார், சூர்யாவை தேடி வருகின்றனர்.