மனைவி மாயம் கணவர் புகார்
அந்தியூர்:அந்தியூர் அருகே பிரம்மதேசம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அரவிந்த், 27; பிரம்மதேசத்தில் ஒரு பேக்கரில் டீ மாஸ்டராக வேலை செய்கிறார். இவரது மனைவி ரசிகாதேவி, 21; நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், தோழிகள் வீட்டில் விசாரித்தும் தகவல் இல்லை. அரவிந்த் புகாரின்படி அந்தியூர் போலீசார் ரசிகாதேவியை தேடி வருகின்றனர்.