மேலும் செய்திகள்
தி.மு.க., -பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு
06-Oct-2025
பவானிசாகர், பவானிசாகர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டுப்பன்றி கடந்த சில நாட்களாக, பவானிசாகர் கடைவீதிகளில் ஆக்ரோஷமாக சுற்றி திரிந்தது. நேற்று முன்தினம் பஸ் ஸ்டாண்ட் அருகே மார்க்கெட் சதுக்கம் பகுதியில், ஒரு பெண் உட்பட ஐந்து பேரை திடீரென தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள், காட்டுப்பன்றியை வனத்துறையினர் பிடிக்க கோரிக்கை விடுத்தனர். பவானிசாகர் கோழிப்பண்ணை பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அருகே நேற்று சுற்றித்திரிந்த காட்டுப்பன்றியை வனத்துறையினர் வலை வீசி பிடித்தனர். இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
06-Oct-2025