உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பேபி வாய்க்காலில் குப்பை கொட்டுவதை தடுக்க 3 இடங்களில் கம்பி வேலி அமைப்பு

பேபி வாய்க்காலில் குப்பை கொட்டுவதை தடுக்க 3 இடங்களில் கம்பி வேலி அமைப்பு

ஈரோடு, ஈரோடு, காளிங்கராயன்பாளையம், காளிங்கராயன் அணைக்கட்டு துவங்கி ஆவுடையார்பாறை வரை செல்லும் காளிங்கராயன் வாய்க்கால் மூலம், 15,745 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த வாய்க்காலில் பவானி பகுதி துவங்கி ஈரோடு, வெண்டிப்பாளையம் வரை சாய, சலவை, தோல் பட்டறை கழிவு நீரை வெளியேற்றுகின்றனர். ஈரோடு மாநகராட்சி உட்பட பல உள்ளாட்சி சாக்கடை நீரையும் வெளியேற்றுவதால், அதனை தடுக்க வாய்க்காலை ஒட்டி, பேபி வாய்க்கால் அமைத்து கழிவு நீர் சேகரமாகி, தனியாக வெளியேற்றும் அமைப்பை உருவாக்கினர். தற்போதும் வாய்க்கால் மற்றும் பேபி வாய்க்காலிலும் கழிவு நீர் வெளியேற்றம், வீடுகள், ஆலை கழிவு, கட்டட இடிபாடு கழிவுகளை கொட்டுவதால் வாய்க்கால் மாசடைகிறது. இதை தடுக்க நீர் வளத்துறை சார்பில், கே.ஏ.எஸ்.நகர், குயிலன்தோப்பு, வெண்டிப்பாளையம் பகுதிகளில் முழு அளவில் இரும்பு கம்பி, வலைகளால் தடுப்பு அமைத்து வாகனங்கள், டிராக்டர், மாட்டு வண்டி போன்றவைகளில் குப்பைகளை கொண்டு வந்து கொட்டாத வகையில் அமைத்துள்ளனர்.இதுபற்றி நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பேபி வாய்க்கால், காளிங்கராயன் வாய்க்காலுக்கு இடையேதான் வண்டிகளை கொண்டு சென்று குப்பை, கழிவுகளை கொட்டுகின்றனர். அவ்வாறு செல்ல முடியாதபடி கம்பி வலை தடுப்பு அமைத்துள்ளோம். விரைவில் முழு அளவில் பேபி வாய்க்கால் அமைக்க உள்ளதால், வரும் காலங்களில் கழிவு நீர், கழிவு கொட்டுவது முற்றிலும் தடுக்கப்படும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ