உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி வீட்டில்திருடிய பெண் கைது

தொழிலாளி வீட்டில்திருடிய பெண் கைது

ஈரோடு:ஈரோடு, சூரம்பட்டி, அணைக்கட்டு ரோடு, இந்திரா வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி நட்ராஜ், 50; இவரது வீட்டில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் புகுந்த பெண், 11.5 பவுன் நகை, 15 ஆயிரம் ரூபாயை திருடி சென்றார். சூரம்பட்டி போலீசார் 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். திருட்டில் ஈடுபட்ட கரூர், வெங்கமேடு, என்.எஸ்.கே. நகரை சேர்ந்த தர்மராஜ் மனைவி ரமணி, 34, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 11 பவுன் நகையை மீட்டனர். வீடு புகுந்து திருட்டில் ஈடுபடுவது தொடர்பாக, இவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ