மேலும் செய்திகள்
முதல்வர் பார்வைக்கு -2
09-Nov-2024
ஈரோடு: மொடக்குறிச்சி புஞ்சை காளமங்கலம், மன்னாதம்பாளையம் காட்டூரை சேர்ந்த செங்கோடன்,65; கூலி தொழிலாளி. இவர் மனைவி பழனியம்மாள், 54. காங்கேயம்பாளையத்தில் உள்ள சிலுங்கோம்பு முனியப்பன் கோவிவில் நேற்று முன்தினம் சுவாமி கும்பிட்டு கொண்டிருந்தார்.அப்போது கோவில் அருகே குப்பைக்கு தீ வைக்கப்பட்டது. அதிலிருந்து புகை கிளம்பி அருகே இருந்த ஆலமர மலைத்தேன் கூட்டில் பரவியதால், மலைதேனீக்கள் கூட்டில் இருந்து வெளியேறி, அங்கிருந்த பக்தர்களை கொட்ட துவங்கியது. பக்தர்கள் அலறி அடித்து அங்கிருந்து தப்பினர். இதில் பழனியம்மாளை மலை தேனீக்கள் கொட்டியதில், அவர் மயங்கி அதே இடத்தில் விழுந்தார்.தேனீக்களை விரட்டிய பக்தர்கள், பழனியம்மாளை, 108 அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு, 1:40 மணிக்கு இறந்தார். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Nov-2024