உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிகிச்சையில் மயங்கி விழுந்து பெண் சாவு

சிகிச்சையில் மயங்கி விழுந்து பெண் சாவு

அந்தியூர்:அந்தியூர் அருகே சங்கராப்பாளையம், வள்ளலார்புரத்தை சேர்ந்தவர் விஜயா, 45, கூலி தொழிலாளி. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, வீட்டில் துாங்கி கொண்டிருந்த விஜயாவின் காலில் ஏதோ கடித்த உணர்வு ஏற்பட்டதால் திடுக்கிட்டு எழுந்தார். மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் இதுகுறித்து கூறவே அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோதே விஜயா மயங்கி விழுந்தார். பரிசோதனையில் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி