அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் சாவு
காங்கேயம், ஜன. 4-காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி, மாரணம்பாளையத்தை சேர்ந்தவர் கையிலைநாதன் மனைவி கவுரி மனோகரி, 26; தம்பதிக்கு ஏற்கனவே மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமடைந்தவருக்கு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம், 16ம் தேதி பிரசவம் நடந்தது. இதில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஊதியூர் அருகே குள்ளகாளிபாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு, குழந்தையுடன் கவுரி மனோகரி சென்றார். கடந்த, 29ம் தேதி அவருக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டது.தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். நேற்று முன்தினம் காலை மூச்சு விட முடியாமல் மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.