மேலும் செய்திகள்
மனைவி மாயம்; கணவர் புகார்
03-May-2025
கோபி இரு குழந்தைகளுடன் பெண் மாயமானார்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்தவர் குமுதா, 27. இவருக்கு விக்னேஷ், 11, என்ற மகனும், மோக்ஷிதா, 7, என்ற மகளும் உள்ளனர். கணவர் சென்றாயனுடன், 38, ஏற்பட்ட கருத்துவேறுபாடால், கடந்த நான்கு ஆண்டுகளாக, அவரை விட்டு பிரிந்து, கவுந்தப்பாடியில் உள்ள உறவினர் வீட்டில், தனது இரு குழந்தைகளுடன், குமுதா வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த, 15ம் தேதி முதல், குமுதா, தனது இரு குழந்தைகளுடன் மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரின் உறவினர் பிரகாஷ், 26, என்பவர் கொடுத்த புகார்படி, கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
03-May-2025