உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெண் மாயம்: தாய் புகார்

பெண் மாயம்: தாய் புகார்

ஈரோடு: நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம், ஆயக்காட்டூர், பேப்பர் மில் ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த். இவர் மனைவி விஜயா, 30; காதல் திருமண தம்பதி. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்-ளனர். ஆனந்த் சென்ட்ரிங் (கட்டட) வேலை செய்கிறார். மது குடிக்கும் பழக்கம் உள்ளதால், தம்பதி இடையே அடிக்கடி தக-ராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 19ல் ஏற்பட்ட தகராறில், வழக்-கம்போல் கோபித்துக்கொண்டு, மறுநாள் காலை பெற்றோர் வீட்டுக்கு விஜயா வந்து விட்டார். அன்றிரவு கணவர் போன் செய்ததாக கூறி வீட்டில் இருந்து கிளம்பி சென்றார். ஆனால் சிறிது நேரத்தில் விஜயா மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. அக்கம்பக்கம், உறவினர்களிடம் விசாரித்தும் தகவல் இல்லை. விஜயாவின் தாய் பவானி, ஈரோடு டவுன் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !