உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவியுடன் தகராறு தொழிலாளி தற்கொலை

மனைவியுடன் தகராறு தொழிலாளி தற்கொலை

சென்னிமலை:ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் தபான் குமார் ஜேனா. மனைவி, 12 வயது மகனுடன், சென்னிமலை, ஈங்கூர் ரோடு, ஜெ.ஜெ.,நகர் பகுதியில் தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் லைன் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் இருந்ததால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு போதையில் மனைவியுடன் தகராறு செய்து விட்டு தனி அறையில் படுக்க சென்றார். நேற்று காலை அறைக்கதவை திறந்து பார்த்த போது, மின்விசிறியில் கயிற்றால் துாக்கிட்ட நிலையில், பிணமாக தொங்கினார். சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை