உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

பவானி:பவானி வர்ணாபுரம் ஐந்தாவது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 59; லோடு மேனாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வீடு திரும்பியவர், அறைக்குள் புகுந்து பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் வராததால் குடும்பத்தினர் சந்தேகமடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். துாக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். ஒரு வாரமாக கடன் அதிகமாகி விட்டதாக வீட்டில் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை