உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நீரில் மூழ்கி தொழிலாளி பலி

ஈரோடு, திருப்பூர் மண்ணரை கருமரம்பாளையத்தை சேர்ந்த ரவி மகன் சந்த்ரு, 18; சாய பட்டறை தொழிலாளி. நண்பர்களை பார்த்து வருவதாக வீட்டில் இருந்து கடந்த, 12ம் தேதி காலை சென்றார்.அன்று மாலை நண்பர்கள் தனுஷ், யோகேஸ்வரன் ஆகியோருடன் மூணாம்பள்ளி கீழ்பவானி வாய்க்காலில் குளித்த சந்த்ரு, ஆழமான பகுதிக்கு சென்றபோது நீரில் அடித்து செல்லப்பட்டார். இந்நிலையில் நேற்று மதியம் நல்லாம்பட்டி என்ற இடத்தில் வாய்க்காலில் சந்த்ரு உடல் கிடைத்தது.பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கிரிக்கெட் மேட்ச் ஆட மூவரும் சென்றுள்ளனர். மேட்ச் ரத்தானதால் வாய்க்காலில் குளிக்க சென்றபோது விபரீதம் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை