மேலும் செய்திகள்
இரு வாலிபர்கள்மீது போக்சோவில் வழக்கு
04-Sep-2025
வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்
08-Aug-2025
சத்தியமங்கலம், கோபி அருகே கொண்டையம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 24; மனைவி மற்றும் மச்சினன் நந்தகுமாருடன், சத்தியமங்கலம் அருகே உத்தண்டியூரில் தோட்டத்தில் தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்தார். கடந்த, 3ம் தேதி மாலை பிரகாசும், நந்தகுமாரும் மது அருந்தி விட்டு தோட்டத்துக்கு சென்றனர். கீழ்பவானி வாய்க்கால் பாலத்தின் மீது நடந்து சென்றபோது பிரகாஷ் தவறி வாய்க்காலில் விழுந்தார். தீயணைப்பு துறையினர் தேடிய நிலையில் உடல் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் பிரகாஷ் உடல் கரை ஒதுங்கியது. சத்தி போலீசார் மீட்டனர். * நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த, பிளஸ் ௧ படிக்கும், 17 வயது சிறுவன், நண்பர்களுடன் காலிங்கராயன்பாளையத்தில் உள்ள வாய்க்காலில் நேற்று குளித்தபோது தண்ணீரில் மூழ்கி பலியானார்.
04-Sep-2025
08-Aug-2025