உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காகித ஆலை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி காயம்

காகித ஆலை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி காயம்

புன்செய் புளியம்பட்டி: பவானிசாகர் அருகே, காகித ஆலை இயந்திரத்தில் சிக்கி, தொழிலாளி காயமடைந்தார்.பவானிசாகர் அடுத்த பசுவபாளையம் கிராமத்தில், தனியார் பேப்பர் மில் உள்ளது. இங்கு, பவானிசாகர் அருகே ராஜன்நகர் பகுதியை சேர்ந்த ரேனேந்திரன், 40, என்பவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை ஷிப்டுக்கு வந்துள்ளார். மதியம் 12:00 மணியளவில் அங்குள்ள பிரஸ் இயந்திரத்தின் கன்-வேயர் பெல்ட் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ரேனேந்திரன் வலதுகை இயந்திரத்தின் கன்-வேயர் பெல்ட்டில் சிக்கியுள்ளது. இதில் அவர் பலத்த காயம-டைந்தார்.சத்தம் கேட்டு வந்த சக தொழிலாளர்கள், உடனடியாக இயந்தி-ரத்தில் சிக்கியவரை மீட்டு கொத்தமங்கலம் தனியார் மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்-கப்பட்டு, திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்-பட்டார். பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை