விபத்தில் தொழிலாளி பலி
மொடக்குறிச்சி, மொடக்குறிச்சி, ஆலன்காட்டு வலசு, மங்கை நகரை சேர்ந்தவர் நாகராஜ், 53; ஈஞ்சம்பள்ளி கல்யாணிபுரம் பி.கே.பி. ருக்மணியம்மாள் கல்வி நிறுவன தோட்ட தொழிலாளி. அங்கேயே தங்கி இருந்தார். எப்போதாவது வீட்டுக்கு செல்வார். நேற்று முன்தினம் இரவு மொபட்டில் வீட்டுக்கு சென்றார். கரியகவுண்டன் வலசு பகுதியில் சென்ற போது எதிரே ஸ்கூட்டரில் அதிவேகமாக வந்த மடத்துபாளையத்தை சேர்ந்த பிரகதீஸ், 24, இதில் நாகராஜ் தலையில் பலத்த காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் பலியான நாகராஜூக்கு மனைவி, மகன் உள்ளனர்.