மேலும் செய்திகள்
வாய்க்காலில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
23-Apr-2026
சத்தியமங்கலம், :ஆசனுார் அருகே கரடி தாக்கி தொழிலாளி படுகாயமடைந்தார்.ஈரோாடு மாவட்டம், ஆசனுார் அருகே தலமலை பஞ்சாயத்து, தடசலட்டி மலை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 28. இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு, அதே ஊரை சேர்ந்த வீரகுமார் என்பவருடன், கிராமத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் இருந்த கரடி, மூர்த்தியை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். உடன் வந்த வீரகுமார் கரடியை விரட்டி விட்டு மூர்த்தியை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
23-Apr-2026