உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு அலுவலர்களுக்கு செப்.,2, 3ல் பயிலரங்கம்

அரசு அலுவலர்களுக்கு செப்.,2, 3ல் பயிலரங்கம்

ஈரோடு, :தமிழகத்தில் மாவட்டம் தோறும் அனைத்து அலுவலர், பணியாளர்களுக்கு ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் செப்., 2, 3ல் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:45 மணி வரை, கலெக்டர் அலுவலக இரண்டாம் தள கூட்டரங்கில் நடக்கவுள்ளது. ஆட்சி மொழி வரலாறு, சட்டம், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், ஆட்சி மொழி செயலாக்கம், அரசாணை, ஆட்சி மொழி ஆய்வு உட்பட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அலுவலகத்தில் இருந்தும் அலுவலர் அல்லது கண்காணிப்பாளர் ஒருவர், பணியாளர் நிலையில் உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர் அல்லது தட்டச்சர் ஒருவர் என தலா இருவர் கலந்து கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !