உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாரியை எரித்த வாலிபர் கைது

லாரியை எரித்த வாலிபர் கைது

ஈரோடு:சிவகிரி கொல்லன்கோவில் கந்தசாமிபாளையம் சடையப்ப புரத்தை சேர்ந்தவர் கனகராஜ், 48; லாரி டிரைவர். நாமக்கல் மாவட்டம் ஆனங்கூரை சேர்ந்த செங்கோட்டையனுக்கு சொந்தமான அசோக் லைலேன்ட் லாரியை ஓட்டுகிறார்.கடந்த, 3ம் தேதி நள்ளிரவில் இரும்பு பைப் லோடுடன் லாரியை தன் வீட்டு முன் நிறுத்தியிருந்தார். கனகராஜ் எதிர்வீட்டில் வசிப்பவர் சரண்குமார், 23; போதையில் வீட்டில் தகாத வார்த்தை பேசுவதை கனகராஜ், இரண்டு மாதத்துக்கு முன் கேட்டபோது இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டு முன் நிறுத்தியிருந்த லாரிக்கு தீ வைத்து விட்டார். இதில் லாரி சேதமானது. சேத மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிகிறது. புகாரின்படி விசாரித்த சிவகிரி போலீசார், சரண்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை