மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது
02-Sep-2025
கஞ்சா, போதை மாத்திரைவைத்திருந்த வாலிபர் கைதுஅந்தியூர், அந்தியூர் அருகே குந்துபாயூரில், வெள்ளித்திருப்பூர் எஸ்.ஐ., மேகநாதன் தலைமையில் நேற்று ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்பகுதியில், சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவரை போலீசார் சோதனையிட்டனர். அதில், 50 கிராம் கஞ்சா, 60 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், காய்கறி லோடுமேனாக வேலை செய்து வரும் குந்துபாயூர் மஜித் வீதியை சேர்ந்த முபாரக் அலி மகன் ஜாபர் அலி, 20; என்பது தெரிந்தது. கஞ்சா, போதை மாத்திரைகளை கைப்பற்றிய போலீசார், அவரை கைது செய்து பவானி ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
02-Sep-2025