அடிதடி வழக்கில் சிக்கிய வாலிபர் மீது குண்டாஸ்
ஈரோடு:ஈரோட்டில், 10க்கும் மேற்பட்ட அடிதடி வழக்கில் சிக்கிய வாலிபர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது.ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த முருகேசன் மகன் பூபதி, 26; போலீஸ் சரித்திர பதிவேட்டில் ரவுடி என பதிவாகி உள்ளது. இவர் மீது, 10க்கும் மேற்பட்ட அடிதடி வழக்குகள் உள்ளன. அடிதடி வழக்கில் ஈரோடு தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு, மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பூபதியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையிலடைக்க, தாலுகா போலீசார் எஸ்.பி., மூலம் கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். கலெக்டர் கந்தசாமி பரிசீலனையை ஏற்றதால், பூபதி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது. இதை தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.