வாலிபர் போக்சோவில் கைது
அந்தியூர்:அந்தியூர் தாலுகாவை சேர்ந்த தொழிலாளியின், 15 வயது மகள் காணாமல் போனார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி அந்தியூர் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.இதில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த வைகுண்டம், 20; என்ற வாலிபருடன் இன்ஸ்டாகிராமில் சிறுமி பழகியதும், அவருடன் சிறுமி சென்றதும் தெரிந்தது. வைகுண்டத்தை கைது செய்த அந்தியூர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து. பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.