உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி

மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி

சென்னிமலை, -கோபி தாலுகா கூகலூர் அருகே, தாழக்ககொம்புதுார், முத்துசாமி தெரு பகுதியை சேர்ந்த வெங்கடாச்சலம்-மகேஸ்வரி தம்பதி, சென்னிமலை யூனியன் ஈங்கூர் ஊராட்சி மித்ரா கார்டன் அருகே வசிக்கின்றனர்.இவர்களின் மகன் கவின், 22; டிப்ளமோ முடித்து விட்டு சிப்காட் பகுதியில் ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். யாமாஹா எப்.எசட்,., பைக்கில் சிப்காட் நான்காவது கிராசில் நேற்று முன்தினம் இரவு சென்றார். அப்போது மரத்தின் மீது பைக் மோதி தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் பலியானார். சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ