உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி

வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலி

பவானி:பவானி அருகே காலிங்கராயன் வாய்க்காலில், நேற்று முன்தினம் மாலை குளித்த ஒரு வாலிபர், தண்ணீரில் மூழ்கி விட்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. சித்தோடு போலீசார் விசாரணையில், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை, சவுடேஸ்வரி நகரை சேர்ந்த சீனிவாசன், 27, என்பது தெரிந்தது. சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !