மேலும் செய்திகள்
பொக்லைன் மோதி பெண் உயிரிழப்பு
22-Oct-2024
பைக் மீது சரக்கு ஆட்டோமோதி வாலிபர் உயிரிழப்புகோபி, நவ. 21-கோபி அருகே, பைக் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில், ஹோட்டல் சப்ளையர் பலியானார்.கோபி அருகே கலிங்கியத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன், 38. ேஹாட்டல் சப்ளையர்; இவர் நேற்று முன்தினம் இரவு, 7:40 மணிக்கு ஹீரோ மேஸ்ட்ரோ பைக்கில், அதே பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோபியை சேர்ந்த மோகன்குமார், 40, என்பவர் ஓட்டி வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் சந்திரசேகரன் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சந்திரசேகரன் இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் கார்த்திக், 42, கொடுத்த புகார்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Oct-2024