உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மண்டல அளவிலான பளு தூக்குதல் போட்டி

மண்டல அளவிலான பளு தூக்குதல் போட்டி

ஈரோடு, செப். 20-முதல்வர் கோப்பைக்கான, கோவை மண்டல அளவிலான பளு துாக்கும் போட்டி, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. போட்டிகள், 40, 45 கிலோ என, 16 பிரிவுகளில் நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஸ்குமார் தலைமை வகித்தார். மண்டல முதுநிலை மேலாளர் அருணா தொடங்கி வைத்தார். கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் நுாற்றுக்கும் மேற்பட்டோர் திறமையை வெளிப்படுத்தினர். கல்லுாரி மாணவ, மாணவியருக்கான பளுதுாக்குதல் போட்டி இன்று நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !