உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொங்கல் பண்டிகையையொட்டி அலைமோதிய மக்கள் கூட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி அலைமோதிய மக்கள் கூட்டம்

கள்ளக்குறிச்சி : பொங்கல் பண்டிகையையொட்டி, பொருட்கள் வாங்க கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பொங்கல் பண்டிகை இன்று 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, மந்தைவெளி, அண்ணா நகர், சேலம் சாலை, துருகம் சாலை போன்ற பகுதிகளில் கரும்பு, மஞ்சள், பொங்கல் பானை உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் விற்பனை கடை அதிகளவில் துவங்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் பொருட்கள் வாங்க கள்ளக்குறிச்சி சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து மக்கள் குவிந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீரமைக்க முடியாமல் போக்குவரத்து போலீசார் திணறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை