உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கூரை வீடு தீ பிடித்து எரிந்து போதையில் இருந்த முதியவர் பலி

கூரை வீடு தீ பிடித்து எரிந்து போதையில் இருந்த முதியவர் பலி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே கூரை வீடு தீ பிடித்து எரிந்து மதுபோதையில் இருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கள்ளக்குறிச்சி ஏமப்பேர் சேர்ந்தவர் ஜெகநாதன்,63; இவர் நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு சிறு கூரை வீட்டில் மதுபோதையில் ேஷாபாவில் படுத்துக் கொண்டு புகை(பீடி) பிடித்துள்ளார். இதற்கிடையே திடீரென கொட்டகை தீ பிடித்து எரிந்துள்ளது. உடன் அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து தீயில் சிக்கி படுகாயமடைந்த ஜெகநாதனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை