உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உதவி மின் பொறியாளர் அலுவலகங்கள் இடமாற்றம்

உதவி மின் பொறியாளர் அலுவலகங்கள் இடமாற்றம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் ஏமப்பேர் கிராம உதவி மின் பொறியாளர் அலுவலகங்கள் நாளை முதல் புதிய இடத்தில் செயல்பட உள்ளது.செயற்பொறியாளர் கணேசன் செய்திகுறிப்பு:கள்ளக்குறிச்சி நகர உதவி மின் பொறியாளர் அலுவலகம், ஏமப்பேரில் கிராம உதவி மின் பொறியாளர் அலுவலங்களில் சேலம் மெயின் ரோடு, ராஜாம்பாள் நகர் சொந்த வளாகத்தில் இயங்கி வந்தது.இந்நிலையில் உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் இடமாற்றம் செய்யப்பட்டு நாளை 1ம் தேதி முதல் புதிய இடத்தில் இயங்குகிறது.அதன்படி கள்ளக்குறிச்சி நகர உதவி மின் பொறியாளர் அலுவலகம் ராஜா நகர், வாட்டர் டேங்க் வடபுறத்தில் தீர்த்தாள் நகரில் செயல்பட உள்ளது. அலுவலக போன் எண்.94458 55813ல் தொடர்பு கொள்ளலாம்.அதேபோல், ஏமப்பேர் கிராம உதவி மின் பொறியாளர் அலுவலகம் ஏமப்பேர் மந்தைவெளி அருகே தென்கீரனுார் சாலையில் செயல்பட உள்ளது. 94459 79081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை