மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கல்
04-Mar-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கோட்ட மின்துறை சார்பில் அம்மையகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். உதவி பொறியாளர்கள் அசோக்குமார், சந்தர், மணிகண்டன், பிரகாஷ் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விளக்குகள், மின் விசிறி, டி.வி., உள்ளிட்ட மின்சாதனை பொருட்களை சுவிட்ச் ஆப் செய்து வைக்க வேண்டும். கோடை காலம் துவங்கியுள்ளதால் மின்சாரத்தின் தேவை அதிகமாக இருக்கும்.எனவே, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஈரமான கைகளுடன் மின்சாதன பொருட்களை தொடக்கூடாது. உடைந்த நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் தாழ்வான நிலையில் உள்ள மின் ஒயர்கள் குறித்து தகவலை மின்வாரிய துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மின்வாரிய துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
04-Mar-2025