உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமியை திருமணத்திற்கு வற்புறுத்தியவர் மீது போக்சோ

சிறுமியை திருமணத்திற்கு வற்புறுத்தியவர் மீது போக்சோ

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே திருமணம் செய்து கொள்ள சிறுமியை வற்புறுத்திய வாலிபர் மீது போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் வாசு, 23; இவர் 16 வயது சிறுமியும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர்.கடந்த 6 மாதமாக சிறுமி பேசாதாதல், கடந்த 23 ம் தேதி திருமணம் செய்து கொள்ளும்படி கையை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்துள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், வாசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி