உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பா.ம.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பா.ஜ., கோஷ்டி பூசலால் பரபரப்பு

பா.ம.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பா.ஜ., கோஷ்டி பூசலால் பரபரப்பு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் நடந்த பா.ம.க., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பா.ஜ.,வினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி பூசலால் பரபரப்பு நிலவியது. விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி பா.ம.க., வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் சந்தப்பேட்டை, தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. பா.ஜ., அ.ம.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அரங்கில் கூடி இருந்தனர்.கூட்டம் துவங்க இருந்த நிலையில் பா.ஜ., மாநில துணைத் தலைவர் சம்பத், மாவட்ட தலைவர் கலிவரதனுக்கும் இடையேயான கோஷ்டி பூசல் எதிரொலித்தது.பா.ஜ., மாவட்ட தலைவர் கலிவரதன் நிர்வாகிகளின் பெயரை குறிப்பிட்டு மற்றவர்கள் மேடையில் இருந்து கீழே இறங்குமாறு கூறினார்.இதனால் அதிருப்தி அடைந்த சம்பத்தின் ஆதரவாளரான முன்னாள் மாவட்ட செயலாளர் லோகநாதன் அவர் அமர்ந்திருந்த சேரில் இருந்து எழுந்தார். இதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மேடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.ஒரு கட்டத்தில் அதிருப்தியடைந்த கலிவரதான் அங்கிருந்து வெளியேறினார்.அவரை பா.ம.க., வினர் சமாதானப்படுத்தி மீண்டும் உள்ளே அழைத்து வந்தனர். அதையடுத்து வேட்பாளர் முரளி சங்கரை அறிமுகம் செய்து வைத்து பேசத் தொடங்கினர். விழா துவங்கும்போதே பா.ஜ., வினரிடையே வெளிப்பட்ட கோஷ்டி பூசல் பா.ம.க., வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்