உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆற்றுப் பாலத்தில் பஸ் மோதி விபத்து 

ஆற்றுப் பாலத்தில் பஸ் மோதி விபத்து 

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையத்தில் ஆற்றுப் பாலத்தில் அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. கள்ளக்குறிச்சி அரசு பணிமனையைச் சேர்ந்த தடம் எண்.451 அரசு பஸ். நேற்று முன்தினம் இரவு பெங்களூருவிலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்துகொண்டிருந்தது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பஸ்சை தற்காலிக டிரைவர் விஜய் ஓட்டி வந்தார். கண்டக்டர் மனோகரன் பணியிலிருந்தார். அதிகாலை 3:30 மணியளவில் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் ஆற்றுப் பாலத்தின் மீது வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியது. இதில் பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்தது. பஸ்சில் இருந்த 4 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். அவர்கள் மாற்று பஸ்சில் கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி