உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு 

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு 

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே நிலத் தகராறில் பெண்ணைத் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா, 55; அதே ஊரைச் சேர்ந்தவர் காமராஜ். இருவருக்குமிடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த மாதம் 29 ம் தேதி சரோஜா நிலத்தில் காமராஜ் ஏர் உழுதார்.இது குறித்து தட்டிக்கேட்ட சரோஜா மற்றும் அவரது மருமகளை காமராஜ், அவரது மனைவி அழகி, சகோதரர் பாவாடை ஆகியோர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில் காமராஜ் உட்பட 3 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை