மேலும் செய்திகள்
முன்விரோத தகராறு 4 பேர் மீது வழக்கு
15-Feb-2025
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே ஏற்பட்ட தகராறில் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.திருக்கோவிலுார் அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு, 35; புதுவேங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் ராம்குமார், 30; வழக்கறிஞர்.நேற்று முன்தினம் மாலை ராம்குமாரை போன் மூலம் தொடர்பு கொண்ட பிரபு, தான் சந்தைப்பேட்டை வி.ஐ.பி., நகரில், மது போதையில் இருப்பதாகவும், தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற ராம்குமார், பிரபுவை காரில் ஏற்றியே போது, அங்கிருந்த சந்தைபேட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விஜயன், 38; என்பவர் ராம்குமாரிடம் தகராறு செய்து பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார்.இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், ராம்குமார், விஜயன் ஆகியோர் மீது திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
15-Feb-2025