உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது வழக்கு

தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது வழக்கு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் சாலை பணியை தடுத்து நிறுத்திய தி.மு.க., கவுன்சிலர் கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். திருக்கோவிலுார் நகராட்சி, 13வது வார்டு, ஜெயலட்சுமி நகர் செல்லும் பாதையில், நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் தார் சாலையுடன் கூடிய மழைநீர் வடிகால், சிறு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்த பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி அலுவலர்களை, அந்த வார்டு கவுன்சிலர் சாந்த பிரபாவின் கணவர் மணி, 50; ஒருமையில் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்து இடையூறு செய்துள்ளார். இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதாகவும், பணியை விரைவாக முடிக்க, இடையூறாக இருக்கும் அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, பணி தொடர பாதுகாப்பு வழங்க நகராட்சி ஆணையர் திவ்யா திருக்கோவிலுார் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார், மணி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ