உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முதல்வர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்

முதல்வர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் தங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி குச்சிப்பாளையம், விளந்தை, ஆவி கொளப்பாக்கம், குன்னத்தூர் கிராமங்களில் கட்சி கொடியேற்றினார். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு, வேட்டி, சேலை உள்ளிட்டவைகளை வழங்கினார். அதேபோல, ஆவி கொளப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு நோட்டு உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபி கிருஷ்ணன், பேரூராட்சி சேர்மன் அன்பு, இளைஞரணி பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி