உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு கலெக்டர் பிராசாந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப் பட்டோர், சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில், 2023-24ம் கல்வியாண்டில் நீண்ட நாட்களாக பணபரிவர்த்தனை நடைபெறாத வங்கி கணக்குகள் செயல்படாத நிலையில் இருப்பதால், தமிழக அரசால் கல்வி உதவித்தொகை செலுத்த இயலாமல் உள்ளது.எனவே, தமிழக அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெற பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் வங்கிக்கு நேரடியாக சென்று தங்களது வங்கி கணக்குடன் ஆதார் மற்றும் பான் எண்களை இணைக்க வேண்டும். மேலும், 3 மாதங்களுக்கு ஒரு முறை பணபரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற்று பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ