உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்லுாரி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை

கல்லுாரி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை

மூங்கில்துறைப்பட்டு, ; கல்லுாரி சென்ற மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் இளவரது மனைவி சசிகலா, 37; கணவரை இழந்த இவர், தனது இருண்டு மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.இவரது மூத்த மகள் சந்தியா,19; கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் கல்லூரிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.சசிகலா கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ