மேலும் செய்திகள்
கணவர் மாயம் மனைவி புகார்
28-Aug-2024
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை அடுத்த செம்படை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிமுத்து, 57; இவரது மகள் அம்சவள்ளி, 35; இவரை சின்ன மணியந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு கணவர் இறந்து விட்டார். இதனால் அம்சவல்லி தந்தை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 7ம் தேதி ஹாஸ்டலில் படிக்கும் தனது பிள்ளைகளுக்கு பணம் கட்ட போவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
28-Aug-2024