மேலும் செய்திகள்
காலபைரவர் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
27-Aug-2024
அஷ்டமி வழிபாடு
28-Aug-2024
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம். அதன்படி கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் எழுந்தருளியுள்ள கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி தினமான நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜை நடந்தது. மாலையில் அபிஷேக, ஆராதனை நடத்தி, மந்திர ஜெபம் வாசித்து பூஜைகள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
27-Aug-2024
28-Aug-2024