மேலும் செய்திகள்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
09-Feb-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அண்ணாநகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். வட்டக்குழு ஜக்கிரியா முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு சுப்ரமணியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஸ்டாலின்மணி, அருள்தாஸ் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். வட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், மின் மயானத்தில் எரியூட்டப்படும் பிரேதத்தின் புகை அருகில் உள்ள குடியிருப்புகள், கடைகளுக்கு பரவுகிறது. எனவே, புகை வெளியேற்றும் நீள்குழாய் அமைத்து புகை மேல்நோக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
09-Feb-2025