உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேளாண்மை துணை இயக்குநர் விளைநிலங்களில் ஆய்வு 

வேளாண்மை துணை இயக்குநர் விளைநிலங்களில் ஆய்வு 

ரிஷிவந்தியம் : எடுத்தனுார், கரையாம்பாளையத்தில் உள்ள கம்பு மற்றும் கேழ்வரகு விதைப்பண்ணை விளைநிலத்தை வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு செய்தார்.ரிஷிவந்தியம் அடுத்த எடுத்தனுார் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் சுப்ரமணியன் என்ற விவசாயி விளைநிலத்தில் கம்பு பயிரிட்டுள்ளார். அதேபோல், கரையாம்பாளையத்தை சேர்ந்த சின்னதம்பி மகன் கோவிந்தன் என்பவர் கேழ்வரகு (கே-15) விதைப்பண்ணை வைத்துள்ளார். இந்த விளைநிலங்களை மத்திய, மாநில திட்ட வேளாண்மை துணை இயக்குநர் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நீர் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்தும், கூடுதல் மகசூல் பெற மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கி கூறினார். ஆய்வின் போது, ரிஷிவந்தியம் வேளாண் உதவி இயக்குநர் சியாம்சுந்தர், வேளாண் உதவி அலுவலர்கள் அப்பாஸ், கோபாலகிருஷ்ணன், தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ