உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சித்தலுார் கோவிலில் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் அவதி

சித்தலுார் கோவிலில் அடிப்படை வசதியின்றி பக்தர்கள் அவதி

தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு ஆடி மாத பூஜைக்காக வரும் பக்தர்கள் அடிப்படை வசதியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். சித்தலுாரில் மணிமுக்தா ஆற்றங்கரையை ஒட்டி பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பெரியநாயகி அம்மனை லட்சக்கணக்கானவர்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். தற்போது ஆடி மாதம் என்பதால் இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் அவர்களுக்கு தேவையான போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல்சிரமப்படுகின்றனர். வழக்கமாக ஆடி மாதங்களில் மணிமுக்தா ஆற்றில் நீரோட்டம் இருக்கும். தற்போது வரை எதிர்ப்பார்த்து மழை பெய்யாததால் தண்ணீர் இன்றி ஆறு வறண்டு உள்ளது. இதனால் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் குளிப்பதற்கு போதிய வசதி இல்லை. பெண் பக்தர்களுக்கு தேவையான கழிவறை வசதிகள்,குடிநீர் வசதி இன்றி அவதிப்படுகின்றனர். பல ஆண்டுகளாக கோவிலுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை