மேலும் செய்திகள்
மாற்றுக் கட்சியினர் தி.மு.க., வில் ஐக்கியம்
25-Oct-2024
ரிஷிவந்தியம் : சூளாங்குறிச்சியில் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ராஜி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மற்றும் சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பெருநற்கிள்ளி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிர்வாகிகள் தங்களது பிரச்னைகளை மறந்து ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும். இளைய தலைமுறை நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி, நிர்வாகிகள் செல்வம், சுரேஷ், ரஞ்சித், மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
25-Oct-2024