மேலும் செய்திகள்
விஜயதசமி தினத்தில் அரசு பள்ளிகளில் 66 பேர் சேர்க்கை
12 hour(s) ago
பொது விநியோக திட்ட பொருட்கள் முன்கூட்டியே விநியோகம்
12 hour(s) ago
மது பாட்டில் விற்றவர் கைது
15 hour(s) ago
சின்னசேலத்தில் கும்ப கலச பூஜை
16 hour(s) ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை கண்டித்து பா.ம.க,வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் ஆதரவாக செயல்படுவதாக பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டினர்.இந்நிலையில் நேற்று, சென்னையில் எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோர் பா.ம.க., தலைவர் அன்புமணியை இழிவாக பேசியதாக கூறி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் நேற்று பகல் 2.30 மணியளவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கள்ளச்சாராயத்திற்கு ஆதரவாக செயல்படும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினர்.முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலுார்
திருக்கோவிலுார், சந்தைப்பேட்டை புறவழிச் சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிழக்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், ஜோதி, சேகர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், கள்ளச்சாராய வியாபாரிகளின் பின்னணியில் உள்ள ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரையும் திருக்கோவிலுார் போலீசார் கைது செய்தனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
15 hour(s) ago
16 hour(s) ago