கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மின்கட்டண உயர்வை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் விஜயகுமார், கோவிந்தன், குழந்தைவேல், தவமணி, மாவட்ட பொருளாளர் கருணாகரன் முன்னிலை வகித்தனர்.மின்சார கட்டணம் உயர்வு மற்றும் ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் நிறுத்துவதற்கு காரணமான தி.மு.க., அரசை கண்டித்தும், விவசாயிகளுக்கு காவிரி நீரை திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கலையரசன், நகர செயலாளர் இளையராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, காமராஜ், ஜெய்சங்கர், மஞ்சுநாதன், முருகன், பழனிவேல், கோதண்டபாணி, அருள், பேரூராட்சி செயலாளர்கள் செல்வம், முருகன், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.