உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சுற்றுச்சூழல் மன்றம் விழிப்புணர்வு பேரணி

சுற்றுச்சூழல் மன்றம் விழிப்புணர்வு பேரணி

சங்கராபுரம்: எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் சுற்றுச் சூழல் மன்றம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் சுற்றுச் சூழல் மன்றம் சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்போம் என்ற பதாகைகள் ஏந்தி மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் முல்லைமணி தலைமை தாங்கினார்.சுற்றுச்சூழல் பள்ளி ஒருங்கிணைப்பாளர் தனசேகரன் மாணவர்களுக்கு மர கன்றுகள் வழங்கினார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை அடைந்தது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மரகன்றுகளை நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ