மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
21-Feb-2025
சங்கராபுரம்; சங்கராபுரம் பகுதியில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.சங்கராபுரம் பகுதியில் நீர் பாசனத்தை தவிர்த்து மானாவாரி பயிர்களான உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் பயிர் செய்கின்றனர். அரசம்பட்டு, பாலப்பட்டு, நெடுமானுார், தும்பை, பாச்சேரி, மோட்டாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். 6 மாத பயிரான பருத்தி சாகுபடியில் பராமரிப்பு செலவு குறைவு.குறைந்த செலவில் அதிக லாபம் கிடைக்கிறது. ஒரு குவிண்டால் 8000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது.அறுவடை செய்யும் பருத்தியை சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் அறுவடை செய்யும் இடத்திற்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். இதனால் அலைச்சலின்றி விவசாயிகளுக்கு கைமேல் பணம் கிடைக்கிறது. இதன் காரணமாக சங்கராபுரம் பகுதியில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
21-Feb-2025