மேலும் செய்திகள்
மரத்தில் பைக் மோதல் தொழிலாளி பலி
27-Aug-2024
ரிஷிவந்தியம் : வாணாபுரம் அருகே தண்ணீரில் எலிபவுடர் கலந்து குடித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.வாணாபுரம் அடுத்த யால் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் வினிஷா,14; இவர் அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 1ம் தேதி இரவு 8 மணியளவில் மகள் வினிஷாவிடம் ஏன் சரியாக படிக்கவில்லை என தந்தை ஏழுமலை கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த வினிஷா தண்ணீரில் எலிபவுடர் கலந்து குடித்து, நள்ளிரவு 12 மணியளவில் வாந்தி எடுத்தார். உடன் அவரது பெற்றோர்கள் வினிஷாவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினிஷா நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
27-Aug-2024